அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிடும் போதே, ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர் சிவசக்தி ஆனந்தம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக யாழ். பத்திகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சருடனான கடிதப் போக்குவரத்துத் தொடர்பில் இரா.சம்பந்தன் கூட்டத்தில் தெரியப்படுத்தினார். வடக்கு அமைச்சர்களை 2013ஆம் ஆண்டு முதலமைச்சரே நியமித்ததையும் சுட்டிக்காட்டினார்.
விவசாய அமைச்சராக பொ.ஐங்கரநேசன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் நியமிக்கப்பட்டார் என்று இரா.சம்பந்தன் தெரிவித்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அதனை மறுதலித்துள்ளார். பொ.ஐங்கரநேசனை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே நியமித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை நியமிக்கச் சொல்லி ஆர்பாட்டம் செய்வார்கள். கடையடைப்பு நடத்துவார்கள். பங்காளிக் கட்சிகள் மூன்றும் தாங்கள் வெளியேறுவோம் என்று சொல்வார்கள். இறுதியில் நீங்கள், அவரைத்தான் அடுத்த முதலமைச்சராகவும் நியமிப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “அவரை மீளவும் நீங்கள் நிறுத்தினாலும் நாங்கள் ஏற்க மாட்டோம்.” என்று பதிலளித்துள்ளார்.

0 Responses to முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தினால் ஏற்க மாட்டோம்: ஈ.பி.ஆர்.எல்.எப்