“தற்போதையை சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியமே முக்கியமானது. கூட்டமைப்பினைச் சிதைக்கும் வேலைத்திட்டங்களில் யாரும் ஈடுபடக்கூடாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு தலைமையை விமர்சிக்கும் செயற்பாடுகளை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அரசியல் தீர்வு விடயத்தில் நாம் அதிக கவனத்தோடு செயற்பட்டு வருகின்றோம். எங்களை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறான நிலையில், கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த முனைபவர்களைக் கண்டிக்க வேண்டும். இப்போது ஐக்கியமே முக்கியம்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டமைப்பின் ஐக்கியமே தற்போது முக்கியம்: செல்வம் அடைக்கலநாதன்