வடக்கு மாகாண சபையின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அமர்வின் போது அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை கொழும்பு சென்றுள்ளதால், அவரினால் இன்று முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட விசாரணை அறிக்கை பிறிதொரு நாளில் முன்வைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை கடந்த மே 19ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அதில், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்றும், அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முன்வைக்கப்படாது!