Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத்தை வேரறுப்பதற்காக இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்படும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன்பின்னர், கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது, “இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா - அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தின் மீது இருநாடுகளுக்கும் இரக்கம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய பார்வை கொண்டவர் மோடி. இந்தியாவிற்கு அதிக எரிவாயு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறோம். அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி., போன்ற வரிக்கொள்கையை அமெரிக்காவும் பின்பற்றும். இந்தியா- அமெரிக்க உலக தொழில் முயற்சி தூதுகுழுவை வழி நடத்த என் மகள் இவான்காவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை இவான்கா ஏற்பார் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.

நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாவது, “டிரம்ப்பையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களது பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் முன்னுரிமை வழங்குகிறோம். இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்கும். இந்தியாவின் முன்னணி திட்டங்களில் அமெரிக்காவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அறிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.