ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவை குழுவொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கையினால் உடன்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, மேலும் இரண்டு வருட கால அவகாசங்களை வழங்குவதற்கு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் இணக்கம் காணப்பட்டது.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய அங்கத்துவ நாடுகளிடம் தொடர்ந்தும் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஏனைய ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும், இதற்காக செயற்படும் பொழுது பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்ளை இணைத்தும் பின்னர் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக நடைமுறை ஒன்றை வகுக்கும் நோக்கில் பிரதமர் தலைமையிலும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களின் ஒத்துழைப்புடனும் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதற்காகவும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பற்கான ஆலோசனையை முன்னிலைப்படுத்தி பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 Responses to ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சரவை குழு!