Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொய்ப் பிரச்சாரங்கள் மற்றும் வாய் மூலமான கதைகளைக் கேட்டு ஏமாற வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏதேனும், அனர்த்த நிலைமைகள் ஏற்படின் சம்பந்தப்பட்ட தொழிநுட்ப நிறுவனங்களுடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், மக்களுக்கு தெரியப்படுத்தும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பில் தெரிவித்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கையுள்ளதாக பரவிய பொய்யான செய்தி காரணமாக இன்று திங்கட்கிழமை காலை ஹிக்கடுவ கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும், இதுபோன்ற பிரச்சாரங்கள் குறித்த உண்மை நிலையை அறிய 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு, பிரதீப் கொடுப்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

0 Responses to பொய்ப் பிரச்சாரங்களைக் கேட்டு ஏமாற வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...