வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுடன் பேசவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையிலான சிக்கல்களுக்கு சமரசம் ஏற்பட்டு உள்ளது. அந்த சமரசத்தில் ஏற்பட்டுள்ள வேண்டுகோள்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது தொடர்பில், மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்ந்தேன். அவர்கள் அனைவரும் அந்த சமரசத்தை ஏற்றுக்கொண்டு உள்ளார்கள். இந்த சமரசத்தின் பிரகாரம் வடக்கு மாகாண ஆளுநரிடம் எங்களது உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவது தொடர்பில் ஆளுநருடன் பேச இருக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவது தொடர்பில் ஆளுநருடன் பேசவுள்ளோம்: மாவை சேனாதிராஜா