Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள UCSD என்ற பல்கலைக் கழகத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த தலாய் லாமா கடந்த சனிக்கிழமை அங்கு கௌரவிக்கப் பட்டு உரையும் ஆற்றியிருந்தார். சீன அரசின் முக்கிய அரசியல் எதிரியாகத் தலாய் லாமா கருதப் படுவதால் அவர் உரையாற்றிய கலிபோர்னியா சான் டியேகோ பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் 3500 சீன மாணவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஏனெனில் தலாய் லாமாவுக்கு அங்கீகாரம் அளித்த காரணத்தினால் இந்த அனைத்து சீன மாணவர்களினதும் டிகிரி பட்டத்தை சீன அரசு அனுமதிக்காது விடும் என்ற அச்சம் தோன்றியுள்ளமையால் ஆகும். இது குறித்து குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்குத் தகவல் அளித்த சீன மாணவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் தமது படிப்பைத் தொடர்ந்து அதன் காரணமாக சீன கல்வி அமைச்சு அவர்களின் பள்ளிச் சான்றிதழை அனுமதிக்க மறுத்தால் அது நிச்சயம் எமது வருங்கால வேலை வாய்ப்பைப் பாதிக்கும் என்றுள்ளனர்.

ஏற்கனவே சில சீன மாணவர்கள் UCSD பல்கலைக் கழகத்தின் முன் தலாய் லாமாவை அழைக்க நிர்வாகம் எடுத்த முடிவுக்கு எதிராகப் போராட்டமும் நடத்தி இருந்தனர். UCSD இன் சீன மாணவர் கழகம் விடுத்த செய்தியில் தலாய் லாமா பல காலமாகத் தமது தாய் மண்ணைப் பிளவு படுத்தவும் தேசிய  ஒருமைப் பாட்டைச் சிதைக்கவும் முயற்சி செய்து வருகின்றார் எனக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. ஆனால் UCSD பல்கழைக் கழகமோ தனது  முடிவில் இருந்து பின் வாங்காததுடன் அதன் ட்ரிட்டொன் என்ற பத்திரிகை விடுத்த அறிக்கையில் பூகோள பொறுப்புணர்வு மற்றும் மனிதாபிமானத்துக்கான சேவை தொடர்பில் தலாய் லாமா உலகம் முழுதும் செய்தியை சுமந்து செல்கின்றார் என்றும் தெரிவித்திருந்தது.

சனிக்கிழமை தலாய் லாமா உரையாற்றிய போது அரங்கில் 6000 பட்டதாரிகளும் 15 000 பார்வையாளர்களும் கூடி இருந்ததாகவும் செய்தி வெளியாகி  உள்ளது. இந்த நிகழ்வின் போது பல சீன மாணவர்கள் வெளிநடப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் தலாய் லாமாவின் உரை! : கலக்கத்தில் சீன மாணவர்கள்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.