வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முனைப்போடு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் தேசியக் கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியொன்றே குறித்த நடவடிக்கைக்கான ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
தொடர்புடைய மற்றைய செய்தி:
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகிய இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.
அத்தோடு, குற்றங்கள் நிரூபிக்கப்படாத சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் அந்தக் காலப்பகுதியில், குறித்த அமைச்சுக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் இன்று புதன்கிழமை விசேட விவாதம் இடம்பெற்று வருகின்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?