“முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். வல்லரசாக மாறுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.” என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நாம் நன்றாக இருக்கிறோம். ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை. எமக்கு மூன்று வேளை உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும். அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட. முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்.” என்றுள்ளார்.

0 Responses to வல்லரசாக மாறுவது இருக்கட்டும் முதலில் விவசாயிகளுக்காக நல்லரசாக இந்தியா மாற வேண்டும்: விஜய்