Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கும் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சமுத்திரம் மற்றும் சமுத்திர வளங்களை அர்த்தமுள்ள வகையில் பாவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் சமுத்திரவியல் மாநாடு எதிர்வரும் 09ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் மனித நல்வாழ்விற்காக சொல்லப்படும் விடயங்கள் மிகவும் ஒன்றுக்கொன்றுடன் பிணைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

சுற்றாடல் குறித்து பொதுமக்களுக்கான அறிவு மற்றும் புரிந்துணர்வு வரலாற்றில் முன்னர் இல்லாதளவுக்கு இன்று விரிவுபட்டுள்ளது. இருப்பினும், சுற்றாடல் பேண்தகு விடயமாக முன்னெடுப்பதற்கு எம்மால் முடியாதுள்ளது. இதனாலேயே இந்த மாநாடு முக்கியத்துவம்பெற்றுள்ளது.

இதேபோன்ற தெற்காசியாவில் தென்கிழக்கு ஆசியாவிலும் கிழக்கு பசுபிக் சமுத்திர வலயத்திலும் பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தை முன்னெடுப்பதற்கும் சுற்றாடல் பாதுகாப்பு என்ற நோக்கம் மூன்றையும் நாம் வெற்றிகொள்ள வேண்டும் .

விசேடமாக இலங்கை போன்ற தீவு நாட்டுக்கு உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் சமுத்திர சுற்றாடல் உட்கட்டமைப்பு மாற்றங்களுக்கு நாம் நேரடியாக முகங்கொடுக்கின்றோம்.

எமது நாடு போன்ற அரசாங்கங்களுக்கு சமுத்திர வாழ்க்கை போன்று மரணமும் ஏற்படக்கூடும். உலகக்கடலில் மிதக்கும் பாரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் பெருமளவில் இந்துமா சமுத்திரத்திலேயே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சமுத்திரம் மாசடைதலை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் பேண்தகு சமுத்திரவள பயன்பாட்டில் எமக்கு பெரும் சவால்கள் உண்டு. இதேபோன்று சட்டவிரோதம் மற்றும் விதிகளை மீறும் கடற்றொழில் நடவடிக்கையை வரையறுத்தலுக்காக ஐக்கிநாடுகள் சபையின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.

இதேபோன்றே நிலைபேறான அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதற்காக மேம்படுத்தப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கையின் ஒத்துழைப்பு உண்டு. சுற்றாடல் பாதுகாப்பு குறித்து நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இன்றைய பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் இதனூடாக நாம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா.வின் சர்வதேச திட்டங்களுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ரணில்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.