ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைத்துள்ளமை, சுதந்திரக் கட்சியை அழிவுப் பாதையில் கொண்டு செல்வதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஆகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்திருக்கும் வரையில், சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவினை சரிசெய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆகவே, அவர்களை ஆட்சியமைக்க ஜனாதிபதி அழைத்திருக்க வேண்டும். மாறாக, ஐக்கிய தேசியக் கட்சியோடு, சுதந்திரக் கட்சியையும் இணைத்து ஆட்சியமைத்தமை தேவையில்லாத விடயம். அது, உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயத்துள்ளது. இதனாலேயே, நாம் தனித்துச் செயற்படுகின்றோம். ஜனாதிபதி ரணிலோடு இணைந்திருக்கும் வரையில் இணைவு என்பது சாத்தியமாகாது.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி ரணிலோடு இருக்கும் வரை இணைவு சாத்தியமில்லை: மஹிந்த அணி