Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அயர்லாந்து நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  லியோ வராத்கர் தெரிவாகியுள்ளார். அயர்லாந்தின் தற்போதைய பிரதமர் எண்டா கென்னி தனது பிரதமர் பதவியை விரைவில் ராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு இடம்பெற்றது. இதில் அயர்லாந்தின் உடல்நலத்துறை அமைச்சரான லியோ வராத்கரும் வீட்டு வசத்துறை அமைச்சரான சைமன் கவேனும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்ற லியோ வராத்கர் அயர்லாந்தின் முதல் இளவயது பிரதமர், முதல் ஓரினச்சேர்க்கை பிரதமர் மற்றும் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ஆகிய பெருமைகளை பெற்றுள்ளார்.

மேலும் உலகின் முக்கிய கத்தோலிக்க நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு உயர் பதவி கிடைப்பதும் இதுவே முதன் முறையாகும். லியோ வராத்காரின் தாயார் மிரியாம் ஒரு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவத் தாதி என்பதுடன் அவர் லியோவின் தகப்பன் அசோக் வராத்காரினை 1960 களில் பிரிட்டன் தேசிய மருத்துவ சேவையில் பணி புரியும் போது முதலில் சந்தித்தார். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினரின் இறுதிப் புதல்வரே லியோ வராத்கார் ஆவார்.

உலகில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கும் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் உள்ள அயர்லாந்தில் பொது வாக்கெடுப்பு மூலம் இச்சட்டம் 2015 இல் அமுலானது. ஆனால் அங்கு இன்னமும் கருக்கலைப்பு தொடர்பான சட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் லியோ வராத்கார் தனது பிரச்சார சமயத்தில் அயர்லாந்தில் கருக்கலைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது லியோ வராத்கர் அயர்லாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள போதும், அவர் மத்திய வலது சாரி கொள்கைகள் உடையவர் என்பதும், அவருடைய செல்வாக்கும், வெற்றியும், பெரும்பாலான வலதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் மக்களால் கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு அவர் நீண்டகாலமாக ஓரினச் சேர்க்கையாளர்களுக்கோ, ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்காகவோ குரல் கொடுத்தவர் என கருதிவிட முடியாது. அவர் தற்செயலாக ஓரினச் சேர்க்கையாளராக இருக்கிறார். அவ்வளவு தான் என்கின்றனர் இடதுசாரியினர்.

0 Responses to அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...