ISIS தீவிரவாதிகளால் ஒழுங்கு செய்யப் பட்டிருந்த கூட்டம் ஒன்றின் மீது நிகழ்த்தப் பட்ட வான்வழிக் குண்டுத் தாக்குதலில் அந்த இயக்கத்தின் தலைவனான அபூ பக்கர் அல் பக்தாதி கொல்லப் பட்டிருப்பது உறுதி என ரஷ்யா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சிரியாவின் தெற்கே உள்ள ரக்காஹ் நகரில் மேற்கொள்ளப் பட்ட வான்வழித் தாக்குதல் ஒன்றின் போதே இவர் கொல்லப் பட்டதாக ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சும் உறுதிப் படுத்தியுள்ளது.
பலதரப்பட்ட குழுக்களின் ஊடாகவும் பக்தாதியின் மரணம் உறுதி செய்யப் பட்டு வரத் தொடங்கியிருப்பதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. ஆனால் பின்னர் வெளியான செய்திகளின் படி ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் சேர்கெய் லாவ்ரோவ் தன்னால் பக்தாதி கொல்லப் பட்டதற்கான மிக உறுதியான நிரூபணத்தை வெளியிட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு ஈராக்கின் மோசுல் நகரில் உள்ள அல் நூரி பள்ளி வாசலில் வைத்து ISIS இயக்கத்தின் கலிஃபாவாக (தலைவனாக) அபூபக்கர் அல் பக்தாதி பிரகடனப் படுத்தப் பட்டிருந்தார்.
இவரது மரணம் குறித்து உறுதிப் படுத்த முடியாது என வாஷிங்டன் தெரிவித்துள்ள நிலையில் மேற்குலக மற்றும் ஈராக்கிய அதிகாரிகளும் இது மிகவும் சர்ச்சைக்குரிய தகவல் என்று தெரிவித்துள்ளனர். ஐரோப்பா முழுதும் பல தரப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வந்த காரணத்தினால் ISIS தலைவனான அபூபக்கர் அல் பக்தாதியின் தலைக்கு 20 மில்லியன் யூரோக்கள் கெடு விதிக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஈராக்கின் மோசுல் நகரில் இருந்த 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல் நூரி என்ற மசூதி ISIS போராளிகளால் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் இஸ்லாமியரின் பண்பாட்டை சிறப்பிக்கும் இந்த பழம் பெருமை வாய்ந்த மசூதி தம்மால் தகர்க்கப் படவில்லை என்றும் அல் நூரி மசூதி மற்றும் அங்கிருந்த சாய்ந்த ஸ்தூபி ஆகியன அழிக்கப் பட்டதற்குக் காரணம் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் வான் தாக்குதல் தான் என்று மறுபுறம் ISIS உம் குற்றம் சாட்டியுள்ளது.

0 Responses to ISIS தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப் பட்டதற்கு மிக உறுதியான சான்று கிடைத்துள்ளது : ரஷ்யா