தெற்கு பிரான்ஸைத் தாக்கி வரும் கடுமையான காட்டுத் தீ காரணமாக சுமார் 10 000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர். செயிண்ட் ட்ரோப்பெஷ் சுற்றுலா விடுதி உட்பட அப்பகுதியில் தாக்கி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவியையும் பிரான்ஸ் நாடியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அநேகமாக கோடைக் காலத்தில் இப்பகுதியில் சிறியளவில் காட்டுத் தீ தாக்கி வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சுமார் 4000 தீயணைப்பு வீரர்களும் 19 தண்ணீர் குண்டுகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 12 தீயணைப்பு வீரர்களும் 15 போலிசாரும் மாசுபட்ட புகையை சுவாசித்ததால் உடல் நலம் பாதிக்கப் பட்டனர்.
கோர்சிக்கா தீவினை உள்ளடக்கிய மத்தியதரைக் கடற்பரப்பை அண்டிய பகுதியில் காட்டுத் தீயால் 4000 ஏக்கர் நிலம் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. மிக வலிமையாக வீசும் காற்றால் பரவி வரும் தீயை அடக்க ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பல நாடுகளின் மேலதிக தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானங்கள் உதவியை பிரான்ஸ் உடனே நாடியதுடன் அதன் கோரிக்கையை ஏற்று இத்தாலி உடனே தனது தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்தும் இருந்தது.

0 Responses to பிரான்ஸில் கடும் காட்டுத் தீ! :10 000 பேர் வெளியேற்றம்