Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பெங்களூரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்பு அணிவகுத்தனர். அப்போது மேற்கண்ட குற்றஞ்சாட்டினை முன்வைத்தனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 3 இடங்களுக்கான தேர்தல் வருகிற 8ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் பார்த்தால் அக்கட்சி சார்பில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் 3வது வேட்பாளரை அக்கட்சி களம் இறக்கியுள்ளது. காங்கிரஸ் பலத்தின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற முடியும். அதனால் ஒருவர் (அகமது பட்டேல்) நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 சட்ட மன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தனது சட்ட மன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக 44 சட்ட மன்ற உறுப்பினர்களை பெங்களூருருவுக்கு அழைத்து வந்துள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஒரு ‘ஈகிள்டன்’ என்ற தனியார் சொகுசு விடுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குஜராத் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதியில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அணிவகுத்தனர். அப்போது தங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இதுகுறித்து விடுதியில் தங்கியுள்ள குஜராத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசிங் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது, “மாநிலங்களவைக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், குஜராத்தில் குதிரை வியாபாரம் ஜோராக நடக்கிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடகத்திற்கு குஜராத் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே இங்கு வந்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி இங்கே அழைத்து வரவில்லை.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து எங்கள் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. மிரட்டுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களிக்க எங்கள் கட்சியை சேர்ந்த 22 சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.15 கோடி கொடுப்பதாக பா.ஜ.க விலைபேசியது. இது கண்டிக்கத்தக்கது. எங்கள் கட்சி வேட்பாளருக்கு 60 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to குஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.