Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கீழடி அகழ்வு ஆய்வில் கிடைத்த தொல் பொருட்களின் வயது, 2,200 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில், 2015 முதல், மத்திய தொல்லியல் துறை அகழாய்வு செய்து வருகிறது. அதில் இதுவரை, 5,000க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

அவற்றில், இரண்டு கரிம பொருட்கள் மட்டும், 'கார்பன் டேட்டிங்' என்னும், காலக்கணிப்பு பகுப்பாய்வுக்காக, அமெரிக்காவின், 'பீட்டா' ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அப்பொருட்களின் வயது, 2,160 மற்றும் 2,200 ஆண்டுகள் என, தற்போது தெரிய வந்துள்ளது.

மாநிலங்களவையில், தி.மு.க. உறுப்பினர் கனிமொழியின் கேள்விக்கு, மத்திய கலாச்சார துறை அமைச்சர், மகேஷ் சர்மா அளித்த பதில் மூலம், இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.

0 Responses to கீழடி அகழ்வில் கிடைத்த தொல் பொருட்களின் வயது 2,200 ஆண்டுகளுக்கும் மேலானவை: மத்திய அரசு

Post a Comment

Followers