Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதன்கிழமை ஆப்கானிஸ்தானின் கண்டஹாரில் உள்ள இராணுவப் பாசறை மீது தலிபான்கள் தொடுத்த தாக்குதலில் 26 துருப்புக்கள் பலியானதாகவும் 13 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பாசறையை சுற்றி வளைத்து நூற்றுக் கணக்கான தலிபான்கள் பன்முகமாகத் தொடுத்த இத்தாக்குதலில் மிக வலிமையாக ஆப்கான் இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 80 தலிபான் போராளிகளும் கொல்லப் பட்டதாகத் தெரிய வருகின்றது. இந்த தாக்குதல் பல மணித்தியாலங்களுக்கு நீடித்துள்ளது.

2014 டிசம்பரில் அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகளின் நேட்டோ படை ஆப்கானை விட்டு வெளியேறியதில் இருந்து அங்கு தலிபான்கள் தொடுக்கும் தாக்குதல்களை மிகவும் சிரமத்துடன் ஆப்கான் இராணுவம் எதிர்கொண்டு வருகின்றது. அமெரிக்க கண்காணிப்பு அமைப்பான SIGAR இன் புள்ளி விபரப்படி 2016 இல் ஆப்கானில் தீவிரவாதத் தாக்குதல்களால் இறந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் போலிசாரின் தொகை 35% வீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த எண்ணிக்கை சுமார் 6800 என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வருடம் இத்தொகை மேலும் அதிகரிக்காது இருக்க மிக உன்னிப்பாக அந்நாட்டு இராணுவம் செயற்பட்டு வருகின்றது.

0 Responses to ஆப்கானின் கண்டஹாரில் தலிபான்கள் தாக்குதலில் 26 துருப்புக்கள் பலி

Post a Comment

Followers