Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகில் மிகப்பெரிய திரவநிலையிலான உயிர் எரிவாயு உற்பத்தி செய்யும் நாடு கத்தார் ஆகும். இந்நாடு தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்கின்றது என்ற குற்றச்சாட்டின் கீழ் முக்கிய வளைகுடா நாடுகள் கத்தாருடன் அனைத்து விதமான உறவையும் அண்மையில் முறித்துக் கொண்டன.

மேலும் இந்த உறவு வழமைகுத் திரும்ப வேண்டுமெனில் தமது முக்கிய 13 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும் அதற்குக் காலக்கெடு விதித்தும் இந்த நாடுகள் கத்தாருக்கு அழுத்தம் விதித்திருந்தன. இந்த காலக்கெடு முடிய சொற்ப நாட்களே இருக்கும் பட்சத்தில் கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை 30% வீதம் அதிகரிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. கத்தார் பெட்ரோலியம் கூட்டமைப்பின் தலைவர் இது குறித்துத் தகவல் அளிக்கையில் 2024 இற்குள் இயற்கை எரிவாயு உற்பத்தியை வருடாந்தம் 100 மில்லியன் டன் ஆக அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிகழ்காலத்தில் கத்தார் வருடத்துக்கு 77 மில்லியன் டன் இயற்கை எரிவாயு (LNG) இனை உற்பத்தி செய்து வருகின்றது. இந்நிலையில் சவுதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகளது தடை உத்தரவு கத்தாரை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கடும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை சவுதி தலைமையில் வளைகுடா நாடுகள் ஒன்று கூடி கத்தார் மீதான பொருளாதாரத் தடையை நீடிப்பதா என்பது தொடர்பில் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to வளைகுடா அழுத்தத்துக்கு மத்தியிலும் உயிர் எரிவாயு உற்பத்தியை 30% அதிகரிக்கின்றது கத்தார்

Post a Comment

Followers