நாட்டில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்பதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் யாரும் கருத்துக்களை வெளியிட முடியும். அவற்றைப் பரிசீலிக்க முடியும். ஆனால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள், புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காகவே. ஆகவே, அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தற்போது நாட்டுக்கு அவசியமில்லை என்று பௌத்த பீடங்கள் அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே ஜயம்பதி விக்ரமரட்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினை கொண்டு வருவதற்காகவே 62 இலட்சம் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்: ஜயம்பதி விக்ரமரட்ன