கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது வானில் இடி மின்னலுடன் குறித்த பகுதியில் கடுமையான வெப்பம் தாக்கி வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. பலமான காற்றினால் சமீபத்திய நிலவரப்படி பிரிட்டிஷ் கொலம்பியாவின் 180 முக்கிய இடங்களில் காட்டுத் தீ பரவி உள்ளது.
20 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து 7000 இற்கும் அதிகமானவர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப் பட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வண்டிகளும் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் பட்டு வருகின்றன. மக்களைக் கடும் பரிதவிப்புக்கு உள்ளாக்கி உள்ள காட்டுத் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு கால நிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதைவிட இக்காட்டுத் தீ காரணமாகக் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to கனடாவில் கடும் காட்டுத் தீ: 7000இற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்