Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டி உதவியதாக சென்னையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரை தொடர்ந்து சென்னையில் மேலும் 11 பேரை கைது செய்ய தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உளவுத்துறை மற்றும் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இந்தியாவில் ஆட்கள் மற்றும் நிதி திரட்டி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இரகசிய தகவல் கிடைத்தது.

பின்னர் உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாநிலத்திலும் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் குறித்து தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜமீல் முகமது என்பவருக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் நேரடி தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜமீல் முகமதுவை கைது செய்தனர். அவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நபர்கள் மற்றும் ஜமீல் முகமது வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நாடு முழுவதிலும் இருந்து பல இலட்சம் ரூபாய் பணம் ஜமீல் முகமது வங்கி கணக்கில் வரவு வைத்தது தெரியவந்தது.

அதில் தமிழகத்தில் இருந்தும் பல இலட்சம் ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சென்னை மயிலாப்பூர் பஜார் வீதி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த முஸ்தபா மற்றும் இவரது மகன் முகமது இக்பால்(32) ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து முகமது இக்பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சக்கர செட்டி தெருவை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரின் மகன் ஆரூண்ரசித்(30) என்பவர் ஐ.எஸ். அமைப்புக்கு 5 இலட்சம் வரை நிதி திரட்டி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆரூண்ரசித்தை கடந்த 3ஆம் தேதி ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் ஐ.எஸ். இயக்கத்திற்கு நிதி வழங்கியதில் சென்னை மண்ணடியை சேர்ந்த ராஜா முகமது, சிக்கந்தர், வண்ணாரப்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ரியாசுதீன் ஆகியோர் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மூன்று பேருக்கு நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக சென்னையில் மட்டும் 11 பேர் ஐ.எஸ். இயக்கத்திற்கு கடந்த ஓராண்டில் பல இலட்சம் ரூபாய் வெளிநாட்டில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்ததாக கணக்குகாட்டி நிதி அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆரூண் ரசித் அளித்த தகவலின் படி 11 பேர் பட்டியலை மத்திய உளவுத்துறை போலீசாருக்கும், தமிழக போலீசாருக்கு அனுப்பி உள்ளது.

அதன்படி தமிழக உளவுத்துறை போலீசார் பட்டியலில் உள்ள 11 பேர் வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். ஐ.எஸ். அமைப்புக்கு நிதி அனுப்பிய விவகாரத்தில் சிக்கி உள்ள 11 பேரின் வங்கி கணக்குகள், சொத்து பட்டியல், செல்போன் உரையாடல் உள்ளிட்டவையும் மத்திய உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விரைவில் சென்னைக்கு வந்து ரகசியமாக முகாமிட்டு தொடர்புடைய 11 பேரையும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

0 Responses to ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவிய மேலும் ஒருவர் சென்னையில் கைது!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.