தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளிலேயே உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை டெல்லி திரும்புவதற்காக விமான நிலையம் வந்த போது, அவரிடம் “ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிடும் என்று வதந்தி நிலவுகிறதே?” என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு வெங்கையா நாயுடு பதில் அளிக்கையில், “இது முழுக்க முழுக்க வதந்தி. இதில் சிறிதளவு கூட உண்மை கிடையாது“ என்று கூறினார்.
அத்துடன், மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்தில் உள்ள ஆட்சியை ஒருபோதும் கலைக்காது என்றும், மாநில அரசுகளை கலைக்க வகை செய்யும் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை மத்திய அரசு ஒருபோதும் தவறாக பயன் படுத்தாது என்றும், இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிப்பது பற்றி அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே முடிவு செய்வார்கள் என்றும் அப்போது வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

0 Responses to தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நீடிப்பது, அந்தக் கட்சியின் கைகளிலேயே இருக்கின்றது: வெங்கையா நாயுடு