Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் வடகொரிய விவகாரம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை சீன ஜப்பானியத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசவிருப்பதாக வாஷிங்டன் தகவல் வெளியிட்டுள்ளது. வடகொரியத் தலைவரால் பிரயோகிக்கப் படும் அச்சுறுத்தல்கள் மற்றும் அந்நாட்டின் அணுவாயுதச் செயற்திட்டங்கள் குறித்தே இப்பேச்சுவார்த்தை முக்கியமாக அமையவுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்பில் அதிபர் டிரம்பின் நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. மேலும் இவ்விடயம் தொடர்பில் வடகொரியாவின் பிரதான இராஜதந்திர நட்பு நாடான சீனாவுக்கு டிரம்ப் மிக அதிக அழுத்தம் தெரிவித்து வந்த போதும் கடந்த வாரம் சீனாவின் முயற்சிகள் தோல்வியுற்றதாக அறிவித்திருந்தார். மேலும் வடகொரியா மீது சீனாவும் பாரிய பொருளாதாரத் தடை விதிக்கும் பட்சத்தில் அது அந்நாட்டைப் பேச்சுவார்த்தைக்கு இழுக்கும் மிகச் சிறந்த வழியாக இருக்கும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபேயுடன் மாலை 8 மணிக்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் மாலை 8:45 இற்கும் தொலைபேசியில் உரையாடுகின்றார். ஏற்கனவே தென்கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே  இன் உடன் டிரம்ப் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எவ்வாறு கூட்டாக எதிர்கொண்டு செயற்படுவது என்பது தொடர்பில் இணக்கம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to வடகொரியா விவகாரம் தொடர்பில் சீன ஜப்பானியத் தலைவர்களுடன் பேசுகின்றார் டிரம்ப்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.