நாட்டில் எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசியலமைப்பை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உலர் வலய நீர் வழங்கல் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “புதிய அரசியலமைப்பு குறித்து யாருமே அச்சப்படத் தேவையில்லை. அதனை அமைப்பதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கியுள்ளதால், அவ்விடயத்தினை அரசாங்கத்தினால் உதாசீனம் செய்ய முடியாது.
புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். எனவே நாட்டில் அமைதியான வழிமுறைகளில் நாம் அனைவரும் அரசியலமைப்பின் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to எத்தனை எதிர்ப்புக்கள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு பணிகள் தொடரும்: ரணில்