Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிதி முகாமைத்துவத்தின் தூய்மையும், வெளிப்படைத் தன்மையையும் பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமான நிதி தூய்மையாக்கல் ஆசிய பசுபிக் வலயத்தின் 20வது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

41 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும்

ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, “நிதி தூய்மையாக்கல் என்ற சவாலை எதிர்கொண்டிருக்கும் நாடு அதற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய நேர்மையாக செயற்பட வேண்டும்.

நிதி தூய்மையாக்கலை தடுப்பதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரம் வலுவடையும். சர்வதேச மட்டத்திலான நிதி முகாமைத்துவத்திற்கு இது உதவும் அரச நிதி முறைகேடு, நிதி தூய்மையாக்கல் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியான நிறுவன்களை அமைத்துள்ளது. வினைத்திறனான முறையில் இவை செயற்பட்டு வருகின்றன.

நிதி தூய்மைக்காலின் மூலம் பயங்கரவாதிகளுக்கு பாரியளவிலான நிதி செல்கின்றது. சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள், ஒப்பந்தங்கள் என்பனவற்றை பின்பற்றி முறையான விதத்தில் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

நிதி தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் தலைமைத்துவம் 2018ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதனால் இந்த மாநாடு இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நிதி தூய்மையாக்கல் தொடர்பான ஆசிய பசுபிக் குழுவின் உறுப்பு நாடுகள் நிதி தூய்மையாக்கல், பயங்கரவாத்திற்கு நிதியளித்தல் என்பனவற்றை தடுப்பதற்காக சர்வதேச நிதி பணியகங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.” என்றுள்ளார்.

0 Responses to நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத் தன்மையோடு அரசாங்கம் செயற்படுகின்றது: மைத்திரிபால

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com