“எந்த விடயத்திலும் குறை கூறுவதில் வல்லவர்களாக இருக்கும் எம்மால், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.” என்று வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமானது. அந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடுமையான போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய இத்தருணத்தில், உங்கள் அனைவரதும் முனைப்புடனான ஈடுபாடுகளும் விரைவான செயற்பாடுகளும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.
எமது அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பெற்றுக் கொள்ளல், அவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதிகளை முறையாகச் செலவு செய்வதற்கான திட்ட முன்மொழிவுகள் ஆகியவற்றைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை நாம் யாவரும் முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வேலைகள் துரிதமாக நிறைவுறுத்தப்படாமைக்கான காரணங்களை ஆராய்வது அவசியம். ஆனால் அதே நேரம் அவ்வேலைகளை விரைந்து நிறைவு செய்வதற்கான வழிமுறைகளையுந் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறை, அலுவலர்களின் அனுபவமின்மை போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டு செல்லாது தேவையேற்படின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவு செய்ய முன்வரலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to குறை கூறுவதில் வல்லவர்களான எம்மால் திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை: விக்னேஸ்வரன்