ஊழல் மோசடி மற்றும் கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டுமென்பதால்; முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய முடியும். அதில், எந்தத் தவறும் இல்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்தி அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பண மோசடியில் ஈடுபட்டவர்களையும், திருட்டுப் பணத்தில் தாய் தந்தையருக்கு சமாதி அமைத்தவர்களையும், மனித கொலையுடன் தொடர்புபட்டவர்கள் மீதும் வழக்குத் தொடரவேண்டும். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யவுள்ளதாக கூறப்படுவது தவறான விடயமல்ல. தவறிழைத்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.” என்றுள்ளார்.

0 Responses to கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதில் தவறில்லை: பொன்சேகா