Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் அமைதி இல்லை. இலங்கையிடம் வழங்கப்பட்ட கச்சதீவினை மீட்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். அதற்கான முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி எடுக்க வேண்டும்.” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம் மண்டபத்தில் நேற்று நடந்த அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “இராமாயணத்தால் புகழ் பெற்றது போல, கலாமால் இராமேஸ்வரம் மீண்டும் புகழ் பெற்றுள்ளது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும், உண்மை உழைப்பு, அன்பு, அறிவுக்கூர்மை, தன்னம்பிக்கை இவற்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பெரிய பதவிகளான குடியரசு தலைவர், பிரதமர் பதவிகளுக்கு வந்தவர்கள் அப்துல் கலாமும், மோடியும் மட்டுமே.

தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் அமைதி இல்லை. 5 கடலோர மாவட்டங்களில், 305 மீனவ கிராமங்கள், 3 இலட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்கள் படும் இன்னலுக்கு முக்கிய காரணம், கச்சத்தீவை மீட்காததுதான். மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிப்பு, செவில் வலை மீன்பிடிப்புக்கு மாற்ற வேண்டும். அந்த திட்டங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.1,520 கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருந்தது. பிரதமர் அதனை ஏற்று ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கென 750 படகுகளை வழங்குகிறார். இதற்கென முதல்கட்டமாக சிறப்பு நிதியாக ரூ.100 கோடியும், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ரூ.100 கோடியும் சேர்த்து வழங்கியுள்ளது. தமிழக அரசானது இதற்கு ரூ.86 கோடியை ஒதுக்கீடு செய்து, 500 இழுவலை படகுகளையும், அதற்கான ஆழ்கடல் தூண்டில், வலை ஆகியவற்றை வழங்க உள்ளது. முதல்கட்டமாக 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர், 2015க்கு பிறகு தமிழக மீனவர்களை அடிக்கடி சிறைபிடித்து செல்கின்றனர். இலங்கை அரசின் பிடியில் உள்ள 75 தமிழக மீனவர்கள் மற்றும் 149 படகுகளை மீட்க இலங்கைக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் அமைதி இல்லை; கச்சதீவை மீட்க வேண்டும்: மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

Post a Comment

Followers