Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலமை தாங்கும் தகுதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், கூட்டணியின் செயலாளர் நாயகத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அதன்பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே வீரசிங்கம் ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முதலமைச்சரை எனக்கு நீண்டகாலமாகத் தெரியும். அவரைப் பற்றி விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை. பத்திரிகைகளில் முதலமைச்சரைப் பற்றி விமர்சிக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது. முதலமைச்சரின் மன ஆறுதலுக்காக அவரை நான் சந்திக்க வந்தேன். நாங்கள் அரசியல் பேசவில்லை.” என்றார்.

இதன்போது ஊடகவியலாளர்கள், புதுக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றனவே என்று கேட்டபோது, “முதலமைச்சரிடம், நீங்கள் தலைமை தாங்க வருவதாக இருந்தால் எனது கட்சித் தலைமையை வழங்கத் தயார் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி முதலமைச்சருக்கு மாத்திரம்தான் உண்டு. எனது கட்சி தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற மூத்த பெரிய தலைவர்களால் தொடங்கப்பட்டது. இப்போது அதைப் பற்றி பேசவில்லை.” என்றும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே சந்திப்புக் குறித்து கருத்து வெளியிட்ட சி.வி.விக்னேஸ்வரன், “சந்திப்பு நட்புரீதியானது. நீங்கள் நினைப்பதுபோன்று அரசியல் பூச்சு இதற்குப் வேண்டாம்” என்றுள்ளார்.

0 Responses to கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி விக்னேஸ்வரனுக்கு மட்டுமே உண்டு: ஆனந்தசங்கரி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...