வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாவது, “வடமராட்சிக் கிழக்கு பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறிச் செயற்பட்டுள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் உப பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி தலைமறைவாகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் லொறி சாரதியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி: பருத்தித்துறைப் பொலிஸார் அதிகாரத்தை மீறியுள்ளனர்: பொலிஸ் பேச்சாளர்