யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கடையடைப்பு, பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று திங்கட்கிழமை தமது பணிகளை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் புறக்கணித்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட சேவையையே முன்னெடுத்துள்ளனர். வணிக நிறுவனங்களும் அதிகளவில் மூடப்பட்டுள்ளன.
அத்தோடு, யாழ். மாவட்டச் செயலக ஊழியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

0 Responses to நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கில் கவனயீர்ப்பு போராட்டம்!