Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எரிபொருள் விநியோகமானது அத்தியாவசிய சேவை என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுக்கப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து, பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் எரிபொருள் விநியோகம் மேற்கொண்டு வருவதாகவும் இராணுவம் அறிவித்துள்ளது.

ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய ஊழியர்கள் சங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், நாடு முழுவதிலுமுள்ள மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளானதன் காரணமாக அரசாங்கம் மேற்படி வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to எரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு!

Post a Comment

Followers