Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாலைதீவில் அந்நாட்டு அதிபர் யமீனின் உத்தரவுக்கு அமைய பாதுகாப்புப் படையினரால் திங்கட்கிழமை அந்நாட்டுப் பாராளுமன்றம் மூடப்பட்டுள்ளது. மேலும் பாராளுமன்றத்துக்குள் சட்ட வல்லுனர்கள் நுழைய அனுமதி அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுக்கப் பட்டதால் ஏற்பட்ட கைகலப்பில் சிலர் காயம் அடைந்துள்ளனர்.

இத்தகவலை மாலைதீவின் பிரதான எதிர்க்கட்சியான மால்தீவ் ஜனநாயகக் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது. மாலைதீவு பாராளுமன்ற பேச்சாளரை பதவி நீக்கம் செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்த குறித்த சட்ட வல்லுனர்கள் முயன்றதால் தான் அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தை மூட உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மாலைதீவில் கொண்டுவரப்பட்ட பன்முகக் கட்சி ஜனநாயக அமைப்பின் பிரகாரம் கிடைக்கும் ஜனநாயக நன்மைகளை சமீப வருடங்களாக இல்லாது செய்து வருவதாக அந்நாட்டு அதிபர் யமீனின் மீது எதிர்க்கட்சிகளும் பொது மக்களும் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளனர். இந்நிலையில் 85 உறுப்பினர்களைக் கொண்ட மாலைதீவு பாராளுமன்றத்தில் அதன் பேச்சாளர் அப்துல்லா மசீஹ் முஹம்மட் இனை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பில் குறைந்த பட்சம் 45 சட்ட வல்லுனர்கள் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப் பட்ட நிலையில் இத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் அது அதிபரின் அதிகாரத்துக்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் எந்தவொரு வாக்கெடுப்பும் நடைபெறாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் அடுத்த பாராளுமன்ற அமர்வு ஜூலை 31 எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள மாலைதீவுகள் மிகவும் பிரசித்தமான செல்வந்த ஹோட்டல்களையும் சுற்றுலா பிரதேசங்களையும் கொண்ட நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மாலைதீவில் பதற்றம் : பாராளுமன்றம் பாதுகாப்புப் படையினரால் முடக்கம்!

Post a Comment

Followers