பொருத்து வீடுகளை வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பொருத்து வீடுகளை வடக்கு- கிழக்கு மாகாணங்களில் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்தப் பொருத்து வீடுகள் வடக்கு- கிழக்கு மாகாணங்களின் காலநிலைக்கு பொருத்தமற்றவை எனப் பல தரப்பினர்கள் சுட்டிக்காட்டியபோதும், பொருத்து வீடுகள் அமைப்பதில் மீள்குடியேற்ற அமைச்சர் விடாப்பிடியாக உள்ளார்.
இதனையடுத்தே, தடை உத்தரவு கோரும் இந்த வழக்கு எம்.ஏ.சுமந்திரனால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருத்து வீடுகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

0 Responses to பொருத்து வீடுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!