மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலிருந்து தப்பிக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று திங்கட்கிழமை சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்தவர்களில் இளைஞர் ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு; தப்பிக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!