Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது வெளியேறி எதிரணிப் பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்.” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து விட்டு எதிரணியில் அமர யாராவது விரும்பினால் அதற்கு எந்த தடையும் கிடையாது. ஆனால் டிசம்பர் மாதம் வரை பொறுமைகாக்குமாறு சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் 18 பேர் எதிரணிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்டாலும் யாரையும் நாம் வெளியேற்ற மாட்டோம், செல்பவர்களை தடுக்கவும் மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிரணிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட 18 சுதந்திரக்கட்சி பிரதி அமைச்சர்களில் மூவர் இந்த ஊடக மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். தாம் எதிரணியில் இணையப் போவதாக வெளியான செய்தியை மறுத்த அவர்கள், கட்சியின் மத்திய குழுவின் முடிவின் பிரகாரமே நல்லாட்சியில் இணைந்ததாகவும் கட்சி முடிவு எடுத்தாலே எதிரணியில் அமர்வதாகவும் கூறியுள்ளனர்.

பிரதி அமைச்சர்களான சுமேதா ஜயசேன, இந்திக பண்டாரநாயக்க மற்றும் தாரனாத் பஸ்நாயக்க ஆகியோரே நேற்றைய ஊடக மாநாட்டில் இந்த கருத்தை வெளியிட்டனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “வேறு மாற்றுவழி இல்லாததாலே நல்லாட்சி அரசில் இணைந்தோம். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிடமும் தனித்தனியாக விரும்பம் கேட்டே அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டார்கள். நாம் இணைந்திருக்காவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும்.

டிசம்பரில் நாம் வெளியேறினால், 106 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஜ.தே.கவுக்கு ஆட்சியமைக்க 7 உறுப்பினர்கள் தான் தேவை. த.தே.கூ உடன் புதிய அரசாங்கம் உருவாகலாம். த.தே.கூ. அரசியலமைப்பு திருத்தத்தில் முன்வைக்கும் கோரிக்கைகள் எவ்வாறானவை என்பது எமக்கு தெரியும். புதிய அரசாங்கம் உருவாக அவர்கள் நிபந்தனைகள் முன்வைப்பார்கள். த.தே.கூட்டமைப்புடன் ஆட்சியமைப்பது நாட்டில் ஸ்தீரமற்ற நிலைமையை தான் உருவாக்கும். இது நாட்டுக்கு உகந்ததல்ல. ஆனால் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான முடிவை எடுப்பார் என கருதவில்லை.

மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் ஒரு பகுதியினர் ஆளும் தரப்பிலும் வேறு சிலர் எதிரணியிலும் அமர்ந்தார்கள். விருப்பமானவர்களுக்கு எதிரணில் அமர அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது சிலர் எதிரணில் அமரப் போவதாக கூறியுள்ளனர். எத்தனை பேர் அவ்வாறு எதிரணிக்கு செல்லப் போகிறார்கள் என்று எமக்குத் தெரியாது. ஓரிருவர் இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். எதிரணிக்கு சென்ற பின்னர் தான் சரியான தொகை தெரியும்.

அரசியல்யாப்பு திருத்தம் தேர்தல் மறுசீரமைப்பு ஆகிய பிரதான நோக்கங்களை நிறைவேற்றவே 2 வருடங்கள் நல்லாட்சி அரசில் இணைய முடிவு செய்யப்பட்டது. 19வது திருத்தத்திற்கு நாம் ஆதரவு வழங்கிய போது, 20வது திருத்தத்தை கொண்டுவர உடன்பாடு காணப்பட்டது. ஜ.தே.கவும் இதற்கு ஆதரிக்க இணங்கியது. எனவே 20வது திருத்தம் தாமதிக்கப்படாமல் துரிதமாக கொண்டுவரப்பட வேண்டும். சிறுபான்மை கட்சிகளின் கோரிக்கைகளையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

தேர்தல் மறுசீரமைப்பை ஜ.தே.க எதிர்க்கவில்லை. 2 வருட ஒப்பந்த காலம் டிசம்பரில் நிறைவடைவதால் அதற்கிடையில் தேவையான பல மாற்றங்களை செய்ய முடியும். டிசம்பருக்கு முன்னதாக மத்திய குழு கூடி ஒப்பந்தத்தை தொடர்வதா அல்லது வெளியேறுவதா என முடிவு செய்யும். கட்சி ஆதரவாளர்களினது நலனுக்காகவே ஜ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்பட்டது.

டிசம்பரில் நாம் வெளியேறினால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஆட்சியமைக்கும் நிலை வரலாம். அது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. த.தே.கூ. எந்த நிபந்தனையும் இன்றி ஒத்துழைப்பு வழங்காது” என்றுள்ளார்.

0 Responses to “அரசிலிருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது எதிரணி பக்கம் செல்பவர்களைத் தடுக்கவோ மாட்டோம்”; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...