Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள 15,000 ஏக்கர் காணியை சீன நிறுவனங்கள் இரண்டிற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவை இரத்துச் செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இத்திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மனுதாரர், இது தொடர்பாக நன்கு அறிந்திருந்தும் அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளார் என்று சட்டமா அதிபர் உட்பட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் முன்வைத்த விடயங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் வாசுதேவ நாணயக்காரவின் மனுவை நிகாரித்துள்ளது.

வாசுதேவ நாணயக்கார தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு நீதவான் குழாமின் பெரும்பான்மை தீர்ப்புக்கமைய நிராகரிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை அங்கத்தவர்கள், சைனீஸ் மெர்ச்சென்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சைனா கொமியூனிகேஷன் நிறுவனம், அரசியலமைப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, சிசிர த ஆப்ரூ, அனில் குணரட்ன ஆகிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மனு ஆராயப்பட்டது. மனுதாரரான வாசுதேவ நாணயக்கார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார த சில்வா ஆஜராகியிருந்தார்.

0 Responses to வாசுதேவ நாணயக்காரவின் அடிப்படை உரிமைகள் மனு; உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிப்பு!

Post a Comment

Followers