Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதிப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தான் காப்பாற்ற முனைந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கடைமையாற்றிய ரொபேர்ட் ஓ. பிளேக் நிராகரித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் படகுகளை மூழ்கடிப்பதற்கு அமெரிக்கா உதவியது என்கிற தகவலும் பொய்யானது என்று தெரிவித்துள்ள அவர், ஆனாலும் கப்பல்களின் இருப்பிடம் தொடர்பிலான தகவல்களை அமெரிக்க புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு வழங்கியதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

வொஷிங்டனை மையமாகக் கொண்ட, இலங்கை சம்பந்தமான அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன், அண்மையில் மேற்கொண்ட சந்திப்பொன்றின் போதே இந்தக் கருத்துகளை ரொபேர்ட் ஓ. பிளேக் வெளியிட்டுள்ளார்.

2006 தொடக்கம் 2009 வரை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தான் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாகக் காணப்படும் பொய்யான தகவல்களை இல்லாது செய்வதற்கு விரும்புவதாகவும், காணப்படும் வதந்திகளில் மிகப்பெரிய வதந்தியாக, கடற்கரையில் வைத்துப் பிரபாகரனை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“புதுக்குடியிருப்பிலுள்ள கடற்கரையொன்றுக்கு, பல்லாயிரக்கணக்கான உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளானவர்களை அழைத்து, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நான் ஒழுங்கு செய்தேன் என இன்றுவரை ஒரு தகவல் பரவுகிறது. பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காகத் தான் அதைச் செய்தேன் என்று கூறப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவதற்கு, எந்த நோக்கமும் இருந்திருக்கவில்லை. மாறாக, மோதல் இடம்பெறும் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளால் அனுமதி மறுக்கப்பட்டு, மனிதக் கேடயங்கள் போன்று பயன்படுத்தப்பட்ட உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானவர்களில், எவ்வளவு பேரை முடியுமே, அவ்வளவு பேரைக் காப்பாற்றுவதற்குத் திட்டம் காணப்பட்டது.

இலங்கை, இந்திய அரசாங்கங்களின் துணையோடு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், நானும் விடுதலைப் புலிகளால் பிடித்து வைக்கப்படுவோம் என்கிற அச்சத்தில், அந்தத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் இல்லாது செய்தது. ஆனாலும், அப்படி நடக்கும் என்று நான் கருதவில்லை.” என்றும் ரொபேர்ட் ஓ. பிளேக் தெரிவித்துள்ளார்.

0 Responses to இறுதிப் போரில் பிரபாகரனை காப்பாற்ற முனையவில்லை: ரொபேர்ட் ஓ. பிளேக்

Post a Comment

Followers