பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணமில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். அமித் ஷா, குஜராத் மாநில சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இப்போது அவர் குஜராத் மாநில மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் அமித் ஷா கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகலாம் என யூகங்கள் எழுந்தது. அதனை அவர் மறுத்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக உத்தரபிரதேச மாநிலம் சென்று உள்ள அமித் ஷாவிடம், மாநிலங்களவை உறுப்பினர் ஆனதும், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினர்.
அமித் ஷா பதில் அளிக்கையில், “இராஜினாமா செய்யும் கேள்விக்கே இடம் கிடையாது. கட்சியின் தலைவராக எனக்கு பொறுப்பு உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றுகின்றேன். முழுமனதுடன் என்னுடைய பணியை செய்து வருகின்றேன். தயவுசெய்து நீங்களாக (மீடியா) எதையும் சொல்லாதீர்கள்,” என்றார்.
மேலும் பாரதீய ஜனதா 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

0 Responses to பா.ஜ.க. தலைவர் பதவியிலிருந்து விலகும் எண்ணம் இல்லை: அமித் ஷா