இலங்கையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனுக்கும், இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், “இது நல்ல சந்திப்பு என்றும் நடுநிலையானதாக இருந்தது. வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அரசியல் கைதிகள், காணாமற்போனவர்கள், காணி பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கினேன்.
அதேவேளை, பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் போட்டி நிலையை கைவிட்டு அரசியலமைப்பை நிறைவேற்ற இணைந்து செயற்பட வேண்டும்.
இரு கட்சிகளும் இணைந்து செயற்பட்டால்தான் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியும். தேசிய பிரச்சினையை தீர்க்க அவர்கள் உதவ வேண்டும். இதற்கு சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: சம்பந்தன்