Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அறிவியலை முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அறிவியல் சார்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் நிதி அயோக் உறுப்பினர் சரஸ்வாத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர்.சிதம்பரம், அறிவியல் துறை சார்ந்த அரசு செயலாளர்கள் பங்கேற்றனர்.

அங்கு மோடி பேசியதாவது, “நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள பிரச்னைகளை தீர்க்க அறிவியலுக்கு முன்னுரிமை தரவேண்டும். இதில், 2022ஆம் ஆண்டுக்குள் குறிப்பிட்ட இலக்கை எட்ட அதிகாரிகள் உழைக்க வேண்டும். குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களின் திறமை மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிய வேண்டும்.

விவசாய துறையில் அதிக புரத சத்துள்ள பருப்பு வகைகள், உணவு தானிய வகைகளை கண்டறிவதில் அறிவியலை அதிகம் பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு துறையில் அடிமட்ட அளவில் பல புதுமைகள் கண்டறியப்பட்டு வருகிறது. சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், வெளிநாட்டில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்வதை குறைக்க முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அறிவியலைப் பயன்படுத்த வேண்டும்: மோடி

Post a Comment

Followers