யாழ். வடமராட்சிக் கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் (வயது 25) எனும் இளைஞர் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ் மற்றும் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமராட்சிக் கிழக்குப் பகுதியில், வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் குடத்தனை 6ஆம் கட்டையை அண்டிய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றதோடு, சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி: யாழ். வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

0 Responses to வடமராட்சிக் கிழக்கு துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி; இரு பொலிஸார் கைது!