Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டு மக்கள் ஆகக்கூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அடுத்த வருடம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் வருடமாக அமையும். இவ்வருடத்தில் 6 சதவீத பொருளாதார அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பல முதலீடுகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதி நகரத்தைக் கட்டியெழுப்பும் தேவை ஏற்படும். இதன் மூலம் உரிய முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சட்டம் மற்றும் சமாதானத்தை மதிக்கும் அபிவிருத்தி கொண்ட நாடொன்றைக் கட்டியெழுப்புவதே சமகால அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த அரசாங்கம் நாட்டின் அடிப்படை வசதி அபிவிருத்திக்கு வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் கடனைப் பெற்றிருந்தது. இக்காலப்பகுதியில் இளம் சமூகத்தினருக்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காததனால் பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடு சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நாட்டிற்குத் தேவையானவர்கள். பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாததன் காரணமாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது. இதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.” என்றுள்ளார்.

0 Responses to அதிகூடிய பலன்களைப் பெறக்கூடிய அபிவிருத்தி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை: ரணில்

Post a Comment

Followers