“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விசேட கண்காணிப்பாளர் பென் எமர்சனுடன், அரசாங்கம் முரண்படவில்லை. அவர், சிறைச்சாலையிலுள்ள தமிழ் கைதிகளை சந்தித்தமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய நாடுகளின் விசேட கண்காணிப்பாளர் பென் எமர்சன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் பேசிய விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின்போது கைதிகளை சந்திப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறை குறித்து குறிப்பிட்டார். இது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வழமையான நடவடிக்கையின் கீழ் கைதிகளை சந்திப்பதற்கான அனுமதி ஐக்கிய நாடுகளின் விசேட கண்காணிப்பாளருக்கு வழங்கப்பட்டது என்று அமைச்சரவை கூட்டத்தின் போது தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போது, எதிர்காலத்தில் இவ்வாறான விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிற்கும் அறிவிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிகாட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாமும் அதில் அங்கம் வகித்துள்ளோம். அதன் நடைமுறை விதிகளுக்கு இலங்கையும் கட்டுப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையுடன் முரண்படும் நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. அவ்வாறு முரண்படுவது நமக்கெதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும். ஐக்கிய நாடுகள் சபையுடன் இராஜதந்திர ரீதியிலேயே நாம் விடயங்களை கையாண்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் அதாவது முன்னைய அரசாங்க காலப்பகுதியில் இவ்வாறான முரண்பாடான நிலை ஏற்பட்டதனாலேயே நாட்டிற்கு சர்வதேச ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது .
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிஷ்டவசமாக சமகால அரசாங்கம் பதவிக்கு வந்ததினால் இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் பாதிப்பிற்குள்ளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2002ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த இராணுவம் தொடர்பிலான உடன்படிக்கைக்கு கைச்சாத்திடவில்லை. இதனாலேயே இராணுவம் தொடர்பில் தற்பொழுது குறிப்பிடப்படும் சர்வதேச விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அரசாங்கம் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் விசேடமாக காணிப்பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் இன்னும் நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இதேபோன்று காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பிலும் இன்னும் தீர்வை காண தவறியுள்ளோம்.
5 வருடங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட 70 தமிழ் கைதிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்படவேண்டும் அல்லது அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் கொண்டுள்ளேன். இவ்வாறான விடயங்களில் இன்னும் தாமதம் உண்டு.” என்றுள்ளார்.
கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான விசேட கண்காணிப்பாளர் பென் எமர்சன், இலங்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை வெளியிட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அரசாங்கம் முரண்படவில்லை: ராஜித சேனாரத்ன