புதிய அரசியலமைப்பின் மாதிரிச் சட்டமூலத்தை தயாரிக்கும் போது, அதனை பௌத்த மகா சங்கத்தினருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மகா சங்கத்தினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில் நடைபெறுகிறது என்றும், அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின், நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினர் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இக் கலந்துரையாடலின் போது முன்வைத்ததுடன், அவை தொடர்பான முன்மொழிவொன்றையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
புதிய அரசியலமைப்பு அவசியமில்லை என்று பௌத்த மகா சங்கத்தினர் தெரிவித்துள்ள நிலையிலேயே, இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

0 Responses to புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும்: மைத்திரி