Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“என் பிரகடனத்தில் பிழையிருக்கிறதாம். எல்லா ஊழல்களையும் சாடாத பிழை. கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி எவ்வகை ஊழலையும் களைய முயல்வதென் கடமை. உமதும்” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதையடுத்து கமல்ஹாசனைத் தாக்கி அமைச்சர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். சமீபத்தில் கமல்ஹாசன், தமிழகத்தில் எல்லாத் துறையிலும் ஊழல் பெருகி விட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கும் அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேற்று புதன்கிழமைமை இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

0 Responses to கட்சி, நட்பு, குடும்ப பேதமின்றி அனைத்து ஊழலையும் களையவது கடமை: கமல்

Post a Comment

Followers