Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற லொறி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த 25 வயதான யோகராசா தினேஷ் என்பவரே இதில் உயிரிழந்திருந்தார்.

இதனால் குறித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும், பொலிஸாரின் இந்த அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து வீதியில் டயர்கள் எரித்தும், போராட்டங்களை நடத்தியும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

யோகராசா தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்ற நிலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் குழு, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.