புதிய அரசியலமைப்பின் இறுதி வரைவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பினூடாக கிடைக்கும் தீர்வு மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக இருந்தால், அந்தத் தீர்வை பொறுப்பெடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை மாகாண சபைகளுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் நிலைமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியலமைப்ப வரைவு வெளிவந்த பின்னர், மாவட்ட ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் மக்களுக்கு விளக்கமளிக்கப்படும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், தேர்தல் முறைமை சம்பந்தமாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிகிறோம். அது, கலப்புமுறைத் தேர்தலாக இருக்கும்.
கலப்பு முறைத் தேர்தலாக இருந்தால், தொகுதிகள் அறிவிக்கப்படவேண்டும். அதற்குக் காலம் தேவைப்படலாம். தொகுதிகள் தீர்மானிக்கப்பட்ட பின்னர் தான் நடைபெறமுடியும். இருந்தாலும், மக்களைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு, நாங்கள் கேட்கிறோம். ” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம்: சம்பந்தன்