தமிழ்ப் பற்றாளரும் சிறந்த ஓவியருமான வீரசந்தானம் (வயது 71) சென்னையில் நேற்று வியாழக்கிழமை காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கும்பகோணம் ஓவிய பள்ளியில் படித்து, மும்பையில நெசவாளர் பணி மையத்தில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து, தமிழ் இனத்துக்காகப் போராட வேண்டும் என்ற நோக்கோடு விருப்ப ஓய்வில் வெளியேறினார்.
தஞ்சை ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ என்ற ஈழத் தமிழர்களின் நினைவகத்தை தனது ஓவியத்தினால் நியமாக்கியவர் வீரசந்தானம்.
கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, தமிழர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொண்டார்.
“மதுக்கடைகளை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்!“ என்பதுதான் அவரின் கடைசிக்கால கோரிக்கையாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் அதி தீவிர செயற்காட்டாளராகவும், கருத்தாளராகவும் இருந்த அவர் இறுதிவரை தனது கடின நிலைப்பாட்டில் இருந்து மாறாதவர்.

0 Responses to ஓவியர் வீரசந்தானம் மறைவு!